சித்திக் கப்பன் சிகிச்சையை உபியிலிருந்து டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Share this News:

புதுடெல்லி (28 ஏப் 2021): பிரபல மலையாள பத்திரிகையாளரான சித்திக் கப்பனின் சிகிச்சையை உத்திர பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் பாலியல் குற்றம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பான் உபி அரசால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியுறுகிறார்.

இந்நிலையில் சித்திக் கப்பனை சிகிச்சைக்காக எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்ற. சித்திக் கப்பனின் சிகிச்சை உ.பி.க்கு வெளியே இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் சித்திக் கப்பனை சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு என்ன தடையாக இருக்கிறது? என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரபிரதேச அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் நாட்டில் அனைத்து மனிதர்களின் உயிர்களும் ஆபத்தில் உள்ளன என்றும் தெரிவித்துள்ள நீதிமன்றம் , உ.பி. அரசு சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில் கப்பனுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply