நாட்டில் யாரும் உணவின்றி உறங்கக்கூடாது – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (07 டிச 2022): நாட்டில் யாரும் உணவின்றி வெறும் வயிற்றில் தூங்கக் கூடாது என்பதே நமது கலாச்சாரம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் கடைசி நபருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலை மற்றும் நிதிப் பாதுகாப்பை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் புதிய பட்டியலை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

“தேசிய உணவுப் பாதுகாப்பின்படி உணவு தானியங்கள் கடைசி மனிதனுக்கும் சென்றடைவதை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று நாங்கள் கூறவில்லை. கோவிட் சமயத்தில் மக்களுக்கு உணவு தானியங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறோம். யாரும் வெறும் வயிற்றில் தூங்கக்கூடாது என்பது நமது கலாச்சாரம்” என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...