அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (18 பிப் 2023): அதானி விவகாரத்தில் இதுகுறித்த குழுவிற்கு ஒன்றிய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவை ஆய்வு செய்ய உச்ச ஒன்றிய அரசு குழு ஒன்றை நியமித்து அதன் பெயரை சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நேரடியாகக் குழுவை நியமிக்கும் என்றும். மத்திய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்கள் குழுவில் இடம்பெறாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அரசு அளித்துள்ள பெயர்களை ஏற்றுக்கொண்டால், அது அரசின் குழு என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் நீதிமன்றத்தின் வேலைப்பளு காரணமாக பதவியில் இருக்கும் நீதிபதியை நியமிக்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெளிவுபடுத்தினார். அனைத்து நிறுவனங்களும் குழுவுடன் ஒத்துழைக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதனிடையே, அதானி விவகாரத்தில் எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உண்மை வெளிவரும் என்றும், அதானிக்கு எதிராக எந்த விசாரணைக்கும் தயார் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக அதானி மீதான குற்றச்சாட்டை விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட மனுதாரர்கள் கோரியுள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் கோரியுள்ளார்.


Share this News:

Leave a Reply