உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள்!

புதுடெல்லி (28 பிப் 2022): உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 7 விமானங்களை இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்த இந்தியர்கள், அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சென்று அடைக்கலமாகி உள்ளனர். அவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நான்கு ஏர் இந்தியா விமானங்கள், ஒரு இண்டிகோ விமானம் ருமேனியா நாட்டின் புகாரெஸ்ட் நகருக்கும், தலா ஒரு ஏர் இந்தியா, இண்டிகோ விமானம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்கும் இயக்கப்பட உள்ளது. இந்த ஏழு விமானங்களும் அடுத்த 24 மணி நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...