மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை!

Share this News:

மும்பை (02 ஜூலை): மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் ஷிண்டேவை நீக்கம் செய்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

பாஜக ஆதரவுடன் புதிய மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நீக்கினார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக சிவசேனா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன் அன்று, மகாராஷ்டிரத்தின் 20வது முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார், அதே நேரத்தில் பாஜக பிரமுகர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்,


Share this News:

Leave a Reply