மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம் – உச்ச நீதிமன்றம் செல்லும் உத்தவ் தாக்கரே!

மும்பை (29 ஜூன் 2022): மகாராஷ்டிராவில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை கோரி சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை, இன்று மாலை நடைபெற உள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 16 சிவசேனா எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 16 எம்.எல்.ஏக்களை ஜூலை 11 வரை தகுதி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்திருந்தது.

இவ்வழக்கு விசாரணையின் போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என உத்தரவிட உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை உத்தவ் தாக்க்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இதற்காக மகாராஷ்டிரா சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூட இருக்கிறது.

இதனையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பு, மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...