புத்தாடை இல்லா ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் முடிவு!

Share this News:

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்கள் புத்தாடை அணியாமல் இவ்வருட ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக அளவிலான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகமெங்கும் ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.

இது இப்படியிருக்க இந்தியாவில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கு ம் தெலுங்கானா மாநிலத்தில் இவ்வருடம் புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர்.

எனினும் ரம்ஜானை முன்னிட்டு முக்கிய கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்த போதும், வரும் மே 31 ஆம் தேதி வரை எந்த கடைகளையும் திறப்பதில்லை என ஐதராபாத் வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் பரபரப்பாய் காணப்படும் சார்மினார் பகுதி ஜவுளிக் கடைகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. முஸ்லிம்களும் இதனை ஏற்று இவ்வருடம் ரம்ஜான் பண்டிகையை புது ஆடைகள் அணியாத பண்டிகையாகவே கொண்டாட முடிவு செய்துள்ளனர்.


Share this News: