வில்லன் நடிகரின் ஹீரோ சேவை – சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

கொச்சி (30 மே 2020): பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தனி விமானத்தை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார்.

கேரளாவில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 167 பேர் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர்களை ஏர் ஆசியா தனி விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு செல்வதற்கு பேருதவி புரிந்துள்ளார் சோனு சூட்.

லாக்டவுன் தொடங்கிய காலங்களிலிருந்தே சோனு சூட் மும்பையிலிருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளில் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 167 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் 147 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனு சூட்டின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டை குவித்து வருகின்றன. சோனு சூட் தபாங், அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர்.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...