யானை கொல்லப்பட்டது எப்படி? கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!

திருவனந்தபுரம் (06 ஜூன் 2020): கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வில்சன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் காட்டுப்பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக நேற்று காலை ஒருவர் கைதானார். அவர் வில்சன் என்றும் அவர் வெள்ளியார் பகுதியில் இவர் விவசாய பணிகளை செய்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. யானை அன்னாசி பழத்தை சாப்பிட்டு அதில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தேங்காயில் வைக்கப்பட்ட வெடிமருந்து வெடித்து யானை காயமுற்றதாக தெரிய வந்துள்ளது.

மேலும் வில்சன் அளித்த வாக்குமூலத்தில், இது வயலில் வைத்த பொறி என்று விசாரணையில் கூறி உள்ளார். வில்சன் வேலை பார்க்கும் வயலில் பன்றி தொல்லை அதிகமாக இருந்து உள்ளது. வயலில் பயிர்களை பன்றிகள் நாசம் செய்துள்ளது. இதனால் பன்றிகளை கொல்வதற்காக வில்சன் பொறி அமைத்து இருக்கிறார். வில்சன் உடன் சேர்த்து இரண்டு பேர் பொறி அமைத்து இருக்கிறார்கள்.

பல இடங்களில் இந்த முறை கடைபிடிக்கப்படும். அப்படித்தான் இந்த பொறியை வைத்தோம். பன்றிக்கு வைத்த பொறியில் யானை சிக்கிவிட்டது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என்றுள்ளனர். இந்த வழக்கில் வில்சன் கூறிய இன்னும் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்துத்வாவினரும், மேனகா காந்தி உள்ளிட்ட பாஜக தலைவர்களும், யானை முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலப்புரத்தில் கொல்லப்பட்டதாகக் கூறி முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அ

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...