ஹிஜாபை கழற்ற மாட்டோம் – அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – VIDEO

அலிகார் (11 பிப் 2022): கர்நாடக அரசு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்ததற்கு எதிராக உத்திர பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான மாணவர்கள் ஹிஜாப் அணிந்து, கோஷங்களை எழுப்பி, தாங்கள் விரும்பியதை அணிய சுதந்திரம் கோரினர்.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஹிஜாபை அனுமதிக்கக் கோரி நாடெங்கும் பல்வேறு மாணவர்கள், பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹிஜாப் எங்கள் உரிமை என்பதாக கோஷங்களையும் எழுப்பினர்.

ஹாட் நியூஸ்: