எந்த சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் – மாணவிகள் திட்டவட்டம்!

பெங்களூரு (05 பிப் 2022): எந்தச் சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் என்று கர்நாடக கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் மாணவிகள் வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது, இல்லையென்றால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவித் துண்டுகளுடன் கல்லூரிகளுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஹிஜாபுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரி அதிகாரிகளால் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இவ்விவகாரம் நாடெங்கும் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் ஹிஜாபை கைவிடத் தயாராக இல்லை என கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆர்.என்.ஷெட்டி கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஆயிஷா நவ்ரீன் மக்தூப் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “ஹிஜாப் எங்களது உரிமை; அதை யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் சட்டசபையில் இந்த பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, முஸ்லிம் பெண்களின் கல்வியைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...