புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் தப்லீக் ஜமாஅத்தினர் -வீடியோ

Share this News:

கந்த்வா (17 மே 2020): மத்திய பிரதேச தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய காத்ரி முஸ்லிம்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுகள் வழங்கி வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த திடீர் ஊரடங்கு பல்வேறு மாநிலங்களீல் வசிக்கும் தொழிலாளர்களை பெரிதும் பாதித்துள்ளது.

இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு நடந்தே செல்லும் அவலம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பலர் பசி மற்றும் உணவிண்மை, விபத்து உள்ளிட்டவைகளால் உயிரிழக்கவும் செய்கின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள காந்த்வாவைச் சேர்ந்த காத்ரி முஸ்லிம்கள் , நீண்ட தூரம் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் வழங்கி உதவுகின்றனர். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு காலணிகள், முகக் கவசங்கள் என அத்தியாவசிய பொருட்களையும் வழங்குகின்றனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

https://www.facebook.com/TheAbhisarSharma/videos/2542941516019808/

மும்பையில் தங்கி அங்கு பணிபுரியும் காசியாபாத்தை பூர்வீகமாகக் கொண்ட பவன் குமார், இதுகுறித்து கூறுகையில், “இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் எல்லா நேரத்திலும் மோதல் சூழ்நிலையில் இருப்பதைக் காட்ட ஊடகங்கள் விரும்புகின்றன. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை எந்த ஊடகமும் காட்டுவதில்லை.

இதோ புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் சேவை செய்யும் இந்த ஜமாஅத் மக்களை ஒரு ஊடகம் கூட காட்டவில்லை. ” என்றார் வேதனையுடன்.


Share this News: