ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

Share this News:

[1:47 PM, 3/30/2022] Sulthan Kuwait: பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் ஹிஜாப் இஸ்லாமிய நடைமுறைகளில் அவசியமானதல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடைபெற்று வருகிறது. ஹிஜாப் தடை விவகாரத்தால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை புறக்கணித்துள்ளதாக அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

இது இப்படியிருக்க கர்நாடக மாநிலம் கடக்கில் அமைந்துள்ள சிஎஸ் பாட்டீல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கே.எஸ்.டி.வி உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி (10 ஆம் வகுப்பு) தேர்வுகளை நடத்தும் போது தனது ஹிஜாபைக் அகற்ற மறுத்ததால் கண்காணிப்பாளரான நூர் பாத்திமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply