டெல்லி கலவரத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த முஹம்மது புர்கான்!

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட மூன்று பேர் கொல்லப் பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் இருவர் உட்பட மூன்றுபேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது.

கொல்லப்பட்டவர்களில் போலீஸ் காண்ஸ்டபிள் ரத்தன் லால் தவிர ஒருவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரின் பெயர் முஹம்மது புர்கான் என தெரியவந்துள்ளது. வன்முறை கும்பல் கொடூரமாக தாக்கியதில் புர்கான் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போராட்டக் காரர்களை நாங்களே அப்புறப்படுத்துவோம் என்றும் போலீஸை கண்டுகொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...