திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி!

Share this News:

திருப்பதி (11 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு காரணமாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் ரூ.3,000க்கு விற்கப்பட்டுள்ளன. தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரிடையாக பெற மிக நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். பெரும்பாலானவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முக கவசம் அணிந்தும் வந்தனர். மேலும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் விடுதிகளில் உள்ள கவுண்டர்களில் 3,000 இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அந்த டோக்கன்களை வாங்க மக்கள் இன்று அலைமோதினர்.

முன்னதாக 5ம் கட்ட ஊரடங்கில் தளர்த்தப்பட்ட விதிகளின் காரணமாக வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News: