கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக இருவர் கைது!

கோவை (25 செப் 2022): கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர்.

அதைத்தொடர்ந்து கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டது.

கோவை மட்டுமல்லாது மாநிலத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.

ஹாட் நியூஸ்: