இனி தவறான செய்திகளை அனுப்பினால் உங்கள் வாட்ஸ் அப் முடக்கப்படலாம்!

Share this News:

புதுடெல்லி (21 மார்ச் 2022): Meta நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp பயனர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில்நுட்பச் சட்ட விதிகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது.

இதனையடுத்து, நாட்டில் சேவை அளித்துவரும் பெரிய சமூக வலைத்தளங்கள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அரசிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த வகையில், வாட்ஸ்அப் கடந்த மாதங்களில் லட்சக் கணக்கிலான கணக்குகளை முடக்கியதாக தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், வாட்ஸ்அப் கணக்குகள் ஏன் முடக்கப்படுகின்றன என்பது குறித்து பயனர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. முடக்கப்பட்ட கணக்குகளை எவ்வாறு மீட்பது, எந்த காரணங்களுக்காக கணக்குகள் முடக்கப்படுகின்றன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

-WhatsApp Plus அல்லது gb whatsapp போன்ற அங்கீகரிக்கப்படாத அல்லது மாற்றியமைக்கப்பட்ட செயலிகளை பயனர் பயன்படுத்தினால் கணக்கைப் பயன்படுத்த முடியாது.

-தவறான செய்திகளை மொத்தமாக அனுப்புதல்

-சொற்ப இடைவெளியில் செய்திகளை மொத்தமாகப் பகிர்தல்

-ஒரு நாள்களுக்குள் பயனர் பலமுறை தடை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், கணக்கை
ரத்துசெய்வதற்கான அதிகாரத்தை மெட்டா கையில் எடுக்கலாம்

-ஒரு பயனர் வெவ்வேறு குழுக்களில் தவறான செய்திகளை பரப்புவது கண்டறியப்பட்டால், அது கணக்கை தடை செய்ய காரணமாக அமையலாம்

-இறுதியாக, நீங்கள் வாட்ஸ்அப் தவிர்த்து மூன்றாம் தரப்பு மென்பொருளுடன், வாட்ஸ்அப் கணக்கு தொடர்புடைய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டால், உங்கள் கணக்கு தடை செய்யப்படலாம்.

மேற்குறிப்பிட்ட காரணங்களினால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம். உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்பட்டால், வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முயற்சிக்கும் போது – “Your phone number is banned from using WhatsApp. Contact support for help.” இதுபோன்ற தகவல் திரையில் தோன்றும்.


Share this News:

Leave a Reply