கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

258
Yediyurappa
Yediyurappa

பெங்களூரு (ஆகஸ்ட் 02,2020): கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தனது ட்விட்டர் பகுதியில் அவர் கூறியுள்ளார்.தென்னிந்திய மாநிலங்களில் தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5,532 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,819 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 57,725 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2,496 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.