ராமர் கோவிலுக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் முடிச்சு போடும் யோகி ஆதித்யநாத்!

Share this News:

லக்னோ (18 டிச 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பிடிக்காதவர்களே விவசாயிகள் போராட்டத்தை பின்னின்று இயக்குகிறார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

விவசாய சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத், இதுகுறித்து கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பிடிக்காதவர்கள் விவசாயிகளை உசுப்பேற்றி நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

‘இந்தியா ஒரு சிறந்த இந்தியாவாக இருக்க விரும்பாத மக்கள் போராட்டத்தின் பின்னால் உள்ளனர். ஆதரவு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் பின்னர் ஏன் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்?, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்? என்றும் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.

மேலும் ‘கம்யூனிஸ்ட் கோட்பாடு ஒருபோதும் சரியாக இருக்க முடியாது. விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் விரும்பாதவர்கள் வேலைநிறுத்தத்தின் பின்னணியில் உள்ளனர் ‘ எனினும் விவசாய சட்டம் நிறைவேறியே தீரும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.


Share this News:

Leave a Reply