ஐதராபாத் பெயர் மாற்றம் – யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர் மாற்றுவதில் என்ன தவறு உள்ளது? என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பாக அவர் பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

“ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர் மாற்ற முடியுமா? என என்னிடம் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏன் மாற்ற முடியாது? உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படியிருக்கையில் ஐதராபாத்தை ஏன் பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்ய முடியாது?” என்றார்.

யோகியின் இந்த சர்ச்சைப் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்: