இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் காசாவில் 52 குழந்தைகள் உட்பட 181 பேர் பலி!

காசா (16 மே 2021):காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 52 குழந்தைகள் உட்பட குறைந்தது 181 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ தகவல்களின்படி, நகரவாசிகளிடையே காயங்களின் எண்ணிக்கையும் 1,225 ஆக உயர்ந்தது.

பாலஸ்தீன் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. டஜன் கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்னர். இதுவரை 1,225 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காசா நகரத்தின் ஒரு முக்கிய பகுதியில் பல கட்டிடங்களையும் சாலைகளையும் தாக்கியது, இதில் மிகப்பெரிய மருத்துவமனையான ஷிபா மருத்துவமனைக்கு செல்லும் ,சாலை முழுவதுமாக அழிந்தது

நடந்துகொண்டிருக்கும் நிலைமை குறித்து ஞாயிற்றுக்கிழமை ஐ.நா.பாதுகாப்புக் குழு விவாதிக்க உள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் இன்னும் ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை.

சனிக்கிழமை பிற்பகல் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களை உள்ளடக்கிய 12 மாடி கட்டிடத்தை குறிவைத்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: