அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ. 4 லட்சம் வரை அபராதம்!

Share this News:

ரியாத் (28 அக் 2021): சவூதி அரேபியாவில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 20 ஆயிரம் ரியால் (இந்திய ரூபாயில் 4 லட்சம் வரை) அபராதம் விதிக்கப்படும்.

பசுமை சவுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக நாடு முழுவதும் 50 கோடி மரங்கள் நடப்படும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சவூதி தாயிஃப் நகரில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய மூன்று பேருக்கு அபராதம் விதிக்கப்படுள்ளது. .

புவி வெப்பமடைதல் மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் சட்டத்தை சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு ஒவ்வொரு மரத்திற்கும் 20,000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.

தவறு செய்பவர்களிடம் ஒரு மரத்துக்கு ரூ.20,000 வசூலிக்கப்படும். மேலும் விறகுகள் சேகரிப்பதை தடுக்கும் வகையில் ஆய்வுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சமையலுக்கு பயன்படுத்தும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.அதேபோல சவுதி சுற்றுச்சூழல் சட்டத்தின்படி வனவிலங்குகளை வேட்டையாடுவதும் சட்டவிரோதமானது. இந்தச் சட்டத்தில் எந்த சமரசத்தையும் எதிர்பார்க்க முடியாது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரித்துள்ளது.


Share this News:

Leave a Reply