ஜூலை 6 வரை துபாய்க்கு விமான சேவை இல்லை – ஏர் இந்தியா அறிவிப்பு!

புதுடெல்லி (24 ஜூன் 2021): வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை துபாய்க்கான விமான சேவை தொடங்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமான சேவைகள் நேற்று மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், . பயண ஏற்பாடுகள் தொடர்பான தெளிவின்மை நீங்காததால் துபாய்க்கான எந்த விமான சேவையும் தொடங்கவில்லை.

இந்நிலையில், ஜூலை 6 வரை துபாய்க்கு எந்த சேவையும் இருக்காது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் நேற்று முதல் துபாய் திரும்ப முடியும் என்று இந்தியர்கள் நம்பினர். கடந்த சனிக்கிழமை துபாய் அதிகாரிகள் இதற்கான உத்தரவை அறிவித்தனர். இதன் அடிப்படையில் சில விமான நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்கின. ஆனால் அதே நாளில் நிறுத்தப்பட்ட டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படவில்லை.

மேலும் ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருப்பவர்களுக்கு பயணத் தடை இருக்கிறதா?, தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் பயணிக்க முடியுமா?, என்பது குறித்து விமான நிறுவனங்களுக்கு கூட தெளிவான பதில் இல்லை. இதனால் முன்பதிவு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், இந்தியாவில் விமான நிலையங்களில் விரைவான பி.சி.ஆர் சோதனை முறையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...