பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரிலும் தடை!

Share this News:

தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் காட்டுவதால் படத்தை தடை செய்ய குவைத் அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் கத்தாரிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படமும் கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply