சவூதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து பரிசீலனை!

Share this News:

ரியாத் (11 செப் 2022): சவூதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர் சவூதி அரேபியா வந்துள்ளார். சனிக்கிழமை மாலை ரியாத் இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சவூதியில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது இந்தகோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஜெயசங்கர் பதிலளித்தார். வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சிலின் (ICCR) மேற்பார்வையின் கீழ் 38 நாடுகளில் இந்திய கலாச்சார மையங்கள் இருப்பதாக அமைச்சரிடம் முன்வைத்த இந்தியர்கள், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வசிக்கும் சவுதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் தேவை என்பது பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது என்றனர்.

இந்திய கலாச்சார மையத்தின் திட்டத்தில் இந்திய பாரம்பரிய கலைகள், இசை, நடனங்கள், கருவி கலைகள், யோகா போன்றவற்றை கற்பிக்க ஆசிரியர்கள் உள்ளனர், அதற்கான அமைப்புகள் மற்றும் அரங்குகள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான இடங்கள் சவூதியில் உள்ளன. மேலும் இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு பல்வேறு கலைஞர்கள் வந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share this News:

Leave a Reply