கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி!

330

தெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,069 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,08,594 ஆக உயர்ந்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  தொடரும் சோகம் - மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

இந்த நிலையில் ஈரானில் கொனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 1,556 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,685 ஆக அதிகரித்துள்ளது.