சவூதியில் காலாவதியான ரீ-என்ட்ரி விசா நுழைவுத் தடை குடும்ப விசாவுக்கு பொருந்துமா?

ரியாத் (17 ஜன 2023): சவூதியில் குடும்ப விசா அல்லது சார்பு விசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் மறு நுழைவு விசாவில் (ரீ-என்ட்ரி) நாட்டை விட்டு வெளியேறிய பிறகு திரும்பவில்லை என்றால், நுழைவுத் தடை பொருந்தாது என்று சவுதி பாஸ்போர்ட் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் விசா காலத்திற்குப் பிறகு, சார்பு விசாவில் உள்ளவர்கள் பெற்றோரின் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பாஸ்போர்ட் இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவில் வசிப்பிட அனுமதி பெற்ற வெளிநாட்டவர்கள் ரீ-என்ட்ரி விசா காலாவதியான பிறகும் வெளிநாட்டிலிருந்து திரும்பாவிட்டால், மூன்று ஆண்டுகளுக்கு சவுதி அரேபியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது சார்பு விசா அல்லது குடும்ப விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. தவாசுல் சேவை மூலம், குடும்ப விசா வைத்திருப்பவர்களின் தகவல்களை தரவுத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாஸ்போர்ட் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் குடும்ப விசாவில் உள்ளவர்கள் ரீ-என்ட்ரி காலாவதியான பிறகு புதிய விசாவில் வர எந்த தடையும் இல்லை. என பாஸ்போர்ட் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

குவைத்தில் நீடிக்கும் கடும் குளிர்!

குவைத் (25 ஜன 2023): குவைத்தில் கடும் குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குவைத் முழுவதும் கடும் குளிர் நிலவத் தொடங்கியது. இரவுகளில், பாலைவனப் பகுதிகளில் காற்றின்...

அழைத்த கவர்னர் – மறுத்த முதல்வர்!

புதுடெல்லி (27 ஜன 2023): தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்வர்...

55 ரியால்களுக்கு விமான டிக்கெட் – சவூதி அரேபிய விமான நிறுவனம் வழங்கும் ஆஃபர்!

ரியாத் (25 ஜன 2023): சவூதியின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை அடீல், சவுதி அரேபியாவில் வெறும் 55 ரியால்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது. மதீனா உட்பட சவுதிக்குள் உள்ள பல்வேறு...