சவூதியில் நிலநடுக்கத்திலிருந்து கட்டிடங்களை பாதுகாக்க புதிய கட்டிட குறியீடு

Share this News:

ஜித்தா (25 பிப் 2023): சவுதி அரேபியாவில் புதிய கட்டிடக் குறியீடு அமலுக்கு வந்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ள பொறியியல் அலுவலகங்கள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்கள் மற்றும் வடிவமைப்புகளைத் தயாரிக்கும் போது, ​​நிலநடுக்கத்தைத் தடுப்பது தொடர்பான விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு, சவூதியின் பொறியியல் அலுவலகங்களை நகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன

பொறியியல் நிறுவனங்கள் கட்டிடங்களையும் கட்டுவதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் முன் இந்த நிபந்தனைகளுக்கு இணங்குவது கட்டாயமாகும். நாட்டில் நிலநடுக்கம் தடுப்பு மிகவும் முக்கியமானது என்றும், நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply