சவூதியில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

Share this News:

ஜித்தா(01 ஜன 2023)- சவூதியில் மழை தீவிரமடையும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) ஜித்தா, தாயிப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கா, ஜுமூம், அல்காமில் மற்றும் பஹ்ரா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என மக்கா கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது.

நாளை பிற்பகல் 3 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மக்கா, அல்பாஹா, அல் காசிம், மதீனா, கிழக்கு மாகாணம், வடக்கு எல்லைப்புற மாகாணம், அல்ஜூஃப், ஹைல், தபூக் மாகாணங்கள் மற்றும் ரியாத் மாகாணத்தின் சில பகுதிகளில் கனமழையால் மலை வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதன்கிழமை வரை. ஆசிர், ஜிசான், நஜ்ரான், ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதன்கிழமை வரை மழை பெய்யக்கூடும். தபூக், அல்-ஜவ்ஃப் மற்றும் வடக்கு எல்லைப்புற மாகாணங்களிலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அல் காசிம், ரியாத், மக்கா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply