சவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்!

ரியாத் (22 மே 2020): சவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிமை மாலை ஷவ்வால் பிறை தென்படாததை அடுத்து சனிக்கிழமை நோன்பு கடைபிடிக்கப்படும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று சவூதி நாளிதழ் அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையே வளைகுடா நாடுகள் அனைத்தும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.