ஒட்டகக் காய்ச்சல் – கத்தார் உலகக் கோப்பை கால்பந்துக்கு ஆபத்தா? உண்மை நிலவரம்!

Share this News:

தோஹா (27 நவ 2022): வளைகுடா நாடான கத்தாரில் 2022 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதே வேளையில், பிற மேற்கத்திய நாடுகளில் இதுவரை நடந்த உலகக் கோப்பை போல் அல்லாமல் பல கட்டுப்பாடுகளை கத்தார் அரசு விதித்துள்ளது.

குறிப்பாக மதுபானம், ஓரினச் சேர்க்கை, விபச்சாரம், ஆடைக் குறைப்பு உள்ளிட்டவைகளில் கத்தார் அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகள், கத்தார் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது மேற்கத்திய ஊடகங்களில் கத்தாரில் ஒட்டகக் காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.

கொரோனா பேரிடருக்குப் பிறகு உலக மக்கள் ஒன்றுகூடி மகிழும் மிக முக்கிய திருவிழாவாக உலகக் கோப்பை கால்பந்து நடந்து வரும் நிலையில், ஒட்டக காய்ச்சல் பற்றிய இந்த தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் இதுவரை கத்தாருக்கு வருகை தந்துள்ளனர். அதேபோல், கத்தார் நாட்டிலும் 28 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். எனவே, கத்தாரில் சுமார் 40 லட்சம் மக்கள் திரண்டிருக்கும் இந்த வேளையில், உலக சுகாதார அமைப்பு அந்நாட்டில் ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது என்றும் அங்கு சென்றுள்ள உலக மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது என்றும் மேற்கத்திய ஊடகங்கள் தங்கள் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளன.

அதேவேளையில், கத்தார்வாழ் மக்களிடம் இதுகுறித்து விசாரித்த வகையில் கத்தாரில் இதுகுறித்து எந்த தகவலும் இல்லை எனவும், கத்தர் மக்களோ, அல்லது கத்தார் நாட்டு ஊடகங்களோ இந்த தகவலை W.H.O வெளியிடவில்லை என்றும் அதனால் இத்தகைய வதந்திகளை  பெரிது படுத்த தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் உலகக் கோப்பை கால்பந்தை கத்தர் அரசு சிறப்பாக நடத்தி வரும் வேளையில் முழு கவனமும் இந்த திருவிழாவை நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் கத்தர் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply