அபுதாபியில் முதல் இந்து கோவில்; புதிய வடிவமைப்பை தேர்வு செய்தார் யூஏஇ அதிபர்!

அபுதாபி (11 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியில் முதல் இந்து கோவிலின் வடிவமைப்பை தேர்வு செய்தார். வளைகுடா ஊடகமான கலீஜ் டைம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளது.

வழக்கமான கோவிலுக்கு பதிலாக, பாரம்பரிய கற்கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, கோவிலின் பொறுப்பாளர் பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன் கோவிலின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகையில் ஷேக் முகமதுவைச் சந்தித்து கோவிலின் இரண்டு திட்டங்களைக் காட்டினார்கள். ஷேக் முஹம்மது இதிலிருந்து சிறந்த வடிவமைப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் 2015 இல், அபுதாபியில் கோயில் கட்ட ஐக்கிய அரபு அமீரக அரசு நிலம் ஒதுக்கியது. கோயில் கட்டுவதற்காக 13.5 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் வாகன நிறுத்த வசதிக்காக கூடுதலாக 13.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடியிடம், அப்போதைய அபுதாபி பட்டத்து இளவரசரும், தற்போதைய அதிபருமான ஷேக் முகமது நிலத்தை ஒப்படைத்தார்.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....