ஹஜ், உம்ரா வழிகாட்டி – விழிப்புணர்வு திரைப்படம்!

Share this News:

ரியாத் (23 டிச 2022): சவுதி அரேபியாவுக்கு வரும் ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கான விழிப்புணர்வு திரைப்படத்தை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இப்படம் ஒன்பது மொழிகளில் வெளியானது. சவுதி ஏர்லைன்ஸின் விமானங்களில் இப்படம் திரையிடப்படவுள்ளது.

ஹஜ் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு படத்தின் பெயர்  ‘ரிஹ்லத்துல் உம்ர்’. என அழைக்கப்படும்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா பற்றி அறிவூட்டுவதே இதன் நோக்கமாகும். ஜெனரல் வக்ஃப் அத்தாரிட்டி மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் இணைந்து இதனை தயாரித்துள்ளது.

மக்கா, மதீனா உள்ளிட்ட அனைத்து ஏரியாக்களையும் உள்ளடக்கிய படத்தில் 800க்கும் மேற்பட்டோர் நடித்துள்ளனர். ஏழு வாரங்களில் 14 இடங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

சவுதி ஏர்லைன்ஸின் விமானங்களில் ஒன்பது மொழிகளில் இப்படம் திரையிடப்படுகிறது. சவுதி ஏர்லைன்ஸ் விமானங்களில் உள்ள இன்ஃப்ளைட் பொழுதுபோக்கு உள்ளடக்க தொகுப்பிலும் இந்த படம் சேர்க்கப்படும்.

ஹஜ் உம்ரா சடங்குகளைச் செய்யும்போது யாத்ரீகர்கள், சடங்குகளை எவ்வாறு செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அவர்கள்  செல்லும் அனைத்து பகுதிகளையும் எளிமையான முறையில் புரிந்துகொள்ள இந்த திரைப்படம் உதவும்.


Share this News:

Leave a Reply