புனித ரமலான் உம்ரா குறித்து சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவிப்பு!

Share this News:

ஜித்தா (06 மார்ச் 2023): புனித ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்கு இதற்கென உள்ள அப்ளிகேஷனில்அனுமதி பெற்ற பின்னரே உம்ரா செய்ய முடியும் என சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிபந்தனை உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் என சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி உம்ரா மற்றும் ஹஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட NUSK செயலி மூலமாகவோ அல்லது தவகல்னா செயலி மூலமாகவோ உம்ரா அனுமதி பெறலாம். கோவிட் நோயால் பாதிக்கப்படாத எவரும் விண்ணப்பங்கள் மூலம் அனுமதி பெறலாம்.

வெளிநாட்டிலிருந்து உம்ரா விசாவில் வருபவர்களுக்கு சவூதி அரேபியாவில் தங்குவதற்கான விசாவின் அதிகபட்ச காலம் 90 நாட்களாக இருக்கும் என்றும் அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply