இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதியில் அப்டேட் செய்வது குறித்த விளக்கம்!

Share this News:

புதுடெல்லி (16 ஜூலை 2021): இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி வரும்போது தவக்கல்னா அப்ளிகேஷனில் அப்டேட் செய்வது குறித்த சிறு விளக்கம்.

சவூதி அரேபியா அங்கீகரித்துள்ள கோவிட் 19 தடுப்பூசிகளில் கோவிஷீல்ட் (ஆஸ்டா ஜெனக்கா) தடுப்பூசியும் ஒன்று. இதனை போடுபவர்கள் முதல் டோசிற்கும், இரண்டாவது டோசிற்கும் இடையே 42 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதாக சவூதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் சிலர் இரண்டாவது டோசை 29 மற்றும் 31 நாட்களிலேயே பெற்றுள்ளனர். இவர்கள் எப்படி சவூதி MOH Portalil அப்டேட் (அப்லோட்)செய்வது என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவ்வாறு குறைந்த இடைவெளியில் தடுப்பூசி பெற்றவர்கள் குழப்பமடைய தேவையில்லை.

கோவிஷீல்ட் இரண்டாவது டோஸ் பெற்றவர்கள் 42 நாட்கள் இடைவெளிக்கு முன்பே பெற்றிருந்தால் இரண்டாவது டோ/ஸ் பெற்று 14 நாட்கள் கழித்து MOH PORTAT ல் UPLOAD செய்தால் தவக்கல்னா அப்ளிகேஷனில் அப்டேட் ஆகிறது. எனவே இந்த முறையை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம். இது ஒருசிலரின் அனுபவ ரீதியான தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது ஏற்கனவே சவூதியில் இருந்து திரும்ப சவூதி திரும்பும் வகையில் விடுமுறையில் சென்றவர்களுக்கு மட்டுமே பொறுந்தும்.


Share this News:

Leave a Reply