லெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு!

481

பெய்ரூட் (04 ஆக 2020): லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

லெபனான் பெய்ரூட் துறைமுகத்தில் பிற்பகலில் நிகழ்ந்த இந்த வெடி விபத்து தலைநகரின் பல பகுதிகளில் எதி்ரொலித்தது. மேலும் நகர மையப்பகுதியில் கருமையாக புகை சூழ்ந்திருந்தது. சில உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டு முறை இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.