சாத்தான்குளம் சம்பவத்திற்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் கண்டனம்!

Share this News:

ஜித்தா (02 ஜூலை 2020): இந்தியன் சோசியல் ஃபோரம் (ISF) ஜித்தா பிரிவு சாத்தான்குள சம்பவத்திற்கான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூர தாக்குதலால் உயிரிழந்த வியாபாரிகள் பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியன் சோசியல் ஃபோரம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த ஜுன் 20, வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்கு, பொது ஊரடங்கின் போது இரவு 9மணிக்கு மேல் கடைதிறந்து வியாபாரம் செய்ததாகவும் மேலும் காவலர்களுக்கு ஒத்துழைக்காமல் அவதூறாக பேசியதாகவும் பொய் குற்றச்சாட்டின் பேரில் பெனிக்ஸ்(வயது 31) மற்றும் ஜெயராஜ் (வயது 58) ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இரவு முழுவதும் காவலர்களால் கொடூரமான சித்ரவதை செய்யப்பட்டு மர்ம உறுப்புகளில் தீவிர காயங்களோடு ஜுன் 22ல் சாத்தான்குளம் நீதித்துறை மாஜிஸ்திரேட் பி.சரவணன் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் அவர்கள் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸை சரியாகப் பார்வையிடமாலும் அவர்களின் உடல்நிலை குறித்து விசரானண செய்யாமலும் அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்ற சாட்டுக்களை ஆய்வு செய்யாமலும் அவர்களை ரிமாண்ட் செய்து கோவில்பட்டி துணை சிறைச்சாலையில் இருவரையும் 14 நாள் நீதித்துறை காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் திங்கட்கிழமையன்று இரவில் பெனிக்சும் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.

இந்த கொடுமையான நிகழ்வு தமிழக மக்களிடையே காவல்துறை பற்றிய அச்சத்தையும் அவர்களின்மீது கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதியன்று மதுரை கருப்பாயூரனியை சேர்ந்த H. அப்துல் ரஹீம் (வயது 75) என்ற கறிகடை வியாபாரி காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஜுன் 9, அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த ஹபீப் முகமது (வயது 32) என்பவர் முகமூடி (பேஸ் மாஸ்க்) அணியாமல் வெளியேவந்தார் என்ற காரணத்திற்காக காவலர்களினால் கொடூரமாகத்தாக்கப்பட்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த குற்றங்களில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தி தகுந்த தண்டனை வழங்கிட வேண்டும் மேலும் இது போன்ற அதிகார வரம்பு மீறல்கள் வருங்காலங்களில் நடக்காமல் இருக்க தமிழக அரசு துரித நடவடிக்கை வேண்டும் என்று இந்தியன் சோசியல் ஃபோரத்தின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.


Share this News: