கலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா!

ஜித்தா (28 மே 2020): கொரோனோ நுண்கிருமி தொற்று பேரிடர் 24 மணி நேர ஊரடங்கில்… விடுமுறை காலத்தில்… ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய விகடகவி 2.0 எனும் நகைச்சுவை கலந்துரையாடல் நிகழ்ச்சியான Lockடவுன் கலாட்டா நிகழ்ச்சி நடந்தது.

சென்ற டிசம்பர் மாதம் ஜெத்தா மாநகரில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் நிகழ்ச்சியான விகடகவியில் நவீன விகடகவி எனும் விருதினைப் பெற்ற கலக்கப் போவது யாரு சீசன் 7 இன் வெற்றியாளர் அசார் மீண்டும் இந்த விகடகவி 2.0 வில் கலந்து கொண்டார்.

இம்முறை அசாரோடு கலக்கப் போவது யாரு புகழ் சின்னத்திரை நட்சத்திரங்கள் டி.எஸ்.கே மற்றும் பாலா ஆகியோரும், விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ராஜா ராணி தொடரில் நடித்து வருகின்ற சின்னத்திரை நட்சத்திரம் ஸ்ரீதேவி (அர்ச்சனா கதாபாத்திரம்) ஆகியோரும் கலந்து கொண்டு இணையம் வழியே கடல் கடந்து வாழும் தமிழர்களை நகைச்சுவை மழையில் நனையச் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்க செயலாளர் சத்யா சிவாஜி வரவேற்புரை வழங்க, துணைத்தலைவர் சேலம் இஸ்மாயில் ஜெம்ஸின் செயல்கள் மற்றும் சேவைகளை எடுத்துரைத்தார்.

மேலும் தஞ்சையில் இருந்து கலந்து கொண்ட தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் லயன் அமல் ஸ்டாலின் அவர்கள் கொரோனோ பேரிடர் துயர் துடைப்பின்
60 நாட்களைக் கடந்து தாயகத்தில் தஞ்சைப் பகுதிகளில் செய்து வருகின்ற தொடர் சேவையில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் பங்கினை, பொருளாதார உதவிகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.

ரியாத்தில் இருந்து கலந்து கொண்ட இம்தியாஸ் அவர்களும் கருத்துரை வழங்க சின்னத்திரை நட்சத்திரங்கள் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைகளில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சிப் படுத்தியும், ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தும் உற்சாகப் படுத்தினர்.

இதைப் படிச்சீங்களா?:  சவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்!

நிறைவாக நன்றியுரையை அல் அமீன் கூற நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரங்கள் நடந்தது. இணையம் வழி நுழைவோம்… இதயம் நனைய மகிழ்வோம்… என்ற வார்த்தைகளை மெய்ப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி இருந்தது என கலந்து கொண்ட வெளிநாடு வாழ் தமிழர்கள் பாராட்டினர்.

நிகழ்ச்சியை ஜெத்தா முத்தமிழ்ச் சங்க பொருளாளர் ரஃபிக் ஹூஷேன் கட்டுப்படித்த, அவருக்கு துணையாக முகமது உமர் மற்றும் அமீன் உதவினர். மேலும் ஜெம்ஸ் நிர்வாகிகள் தீபா சத்யா, டாக்டர் சாவித்திரி மணி, லோகநாதன், சுசீலா, ரமேஷ், உப்பிலி, மதினா இஸ்மாயில், விஜி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சின்னத்திரை நட்சத்திரங்களோடு கலாட்டா செய்தனர்.

நிகழ்சிக்கு உதவி புரிந்த ரஹ்மதுல்லாஹ் மற்றும் ஜெத்தா தமிழ்ச் சங்க மூத்த நிர்வாகி தாயகத்தில் இருந்து கலந்து கொண்ட தஞ்சை ராஃபியா, மல்லப்பன், எழில் மாறன், பேரரசு, சுகன்யா சரவணன், பரூக், மக்கா நசுருல்லாஹ், ஜாஃபர், பாலைவன லாந்தர், ராஜசேகர், விஷாலி, முத்துக்குமார், காதர் பாஷா உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஜெத்தா, ரியாத், தமாம், ஜூபைல், மக்கா, மதினா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களும், நம் தாயகத்தில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான லயன் ஜாஹிர் ஹூஷேன் தொகுத்து வழங்கினார்.