மத்திய கிழக்கில் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலையை நிறுவுகிறது கத்தார்!

தோஹா (09 ஜன 2023): மத்திய கிழக்கின் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலை கத்தாரில் அமைக்கப்படவுள்ளது.

கத்தார் எனர்ஜி மற்றும் செவ்ரான் பிலிப்ஸ் கெமிக்கல் இணைந்து இந்த ஆலையை அமைக்கிறது. 6 பில்லியன் டாலர் செலவில் பிளாஸ்டிக் ஆலை அமைக்கப்படும்.

இந்த ஆலை இயற்கை எரிவாயுவை பாலிதீன் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த ஆலை 2026ல் செயல்படத் தொடங்கும்.

கத்தார் எரிசக்தி நிறுவனமும், டெக்சாஸைச் சேர்ந்த செவ்ரான் நிறுவனமும் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் மூலம் கத்தாரின் பிளாஸ்டிக் உற்பத்தி இரட்டிப்பாகும். ஆண்டுக்கு 14 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

சவூதிஅரேபியாவில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சவூதி நட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்...

குவைத்தில் நீடிக்கும் கடும் குளிர்!

குவைத் (25 ஜன 2023): குவைத்தில் கடும் குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குவைத் முழுவதும் கடும் குளிர் நிலவத் தொடங்கியது. இரவுகளில், பாலைவனப் பகுதிகளில் காற்றின்...

பாஜகவுடன் இணைவதைவிட சாவதே மேல் – நிதிஷ்குமார்!

பாட்னா (30 ஜன 2023): மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பதை விட சாவதே மேல் என பீகார் முதல்வர் நிதிஷ் கூறியுள்ளார். முதல்வர் நிதிஷ் குமாருடன் மீண்டும் இணைய மாட்டேன் என்று பீகார் மாநில பாஜக...