சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரபு தலைவராக தேர்வு!

ரியாத் (10 ஜன 2023): சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க அரபுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை தளமாகக் கொண்ட உலகளாவிய பன்மொழி தொலைக்காட்சி செய்தி சேனல் ஆர்டி அரபு நடத்திய கருத்துக் கணிப்பில் முகமது பின் சல்மான் ‘மிகவும் செல்வாக்கு மிக்க அரபு தலைவர் 2022’ என்ற பட்டத்தை வென்றார்.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களின் மொத்த வாக்குகளில் 7.4 மில்லியன் (62.3 சதவீதம்) வாக்குகளை பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 11,877,546 வாக்குகளில் 7,399,451 வாக்குகளைப் அவர் பெற்றார். டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வாக்கெடுப்பு தொடங்கியது. ஜன. 9, 2023 அன்று வாகெடுப்பு முடிந்தது.

மேலும் இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 2,950,543 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார், இது மொத்த வாக்குகளில் 24.8 சதவீதத்தைப் பிரதிபலிக்கிறது.

மேலும் மொத்த வாக்குகளில் 11.7 சதவீதத்தை பெற்று 1,387,497 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் பெற்றார்.

ஹாட் நியூஸ்:

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான்...

மோடிக்கு எதிரான பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் பேசுவது என்ன?

புதுடெல்லி (25 ஜன 2023): பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிபிசி ஒளிபரப்பியது. 2019 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச்...

மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிராக வலுவடையும் மாணவர்கள் போராட்டம்!

புதுடெல்லி (27 ஜன 2023): பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். பல்கலைக்கழகங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜேஎன்யுவில்...