சவுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் உம்ராவுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பு!

Share this News:

ரியாத் (18 ஜன 2022): சவுதி அரேபியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உம்ரா யாத்ரீகர்களுக்கு மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இரண்டு உம்ராக்களுக்கும் இடையில் 10 நாட்களுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் 30 நாட்களில் மூன்று முறை மட்டுமே உம்ரா செய்யலாம்.

முன்னதாக, சவுதி அரேபியாவிற்குள் உள்ளவர்கள், உம்ராவை ஒருமுறை நிறைவேற்றிய 10 நாட்களுக்குப் பிறகு மட்டுமே இன்னொரு உம்ரா செய்ய முடியும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் கூறியது. இருப்பினும், இந்த விதி இப்போது சவுதிக்கு வெளியில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்கள் 30 நாட்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில், உம்ராவை 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை செய்யலாம். மேலும், முகமூடி அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற முழு நடத்தை விதிகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசியைப் செலுத்திக்கொண்ட 12 வயது முதல் உம்ராவைச் செய்யலாம். தவக்கல்னா, எதமர்னா ஆப் மூலம் உம்ரா அல்லது தொழுகைக்கான அனுமதியைப் பெற்றவுடன், அதன் நேரத்தை மாற்ற முடியாது. இருப்பினும், உம்ராவுக்கு வருபவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திலிருந்து நான்கு மணிநேரம் வரை அனுமதி இருக்கும் பின்பு ரத்து செய்யப்படலாம். அதேவேளை, அது ரத்து செய்யப்பட்டாலும், உம்ராவுக்கான அடுத்த அனுமதி பத்து நாட்களுக்குப் பின்னரே வழங்கப்படும் என்றும் ஹஜ் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply