இந்த விசயத்தில் ஏமன் நாட்டுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்!

195

சனா (29 ஏப் 2020): ஏமன் நாடு கொரோனா தொற்று இல்லத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து வளைகுடா நாடான ஈரானிலும் பரவியது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் உள்நாட்டு போரால் அதிக பாதிப்புகளை சந்தித்த ஏமனில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் வைரஸ் பரவல் அதிகரித்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என அச்சம் எழுந்தது.

இந்நிலையில் அந்நாட்டில் ஹட்ராமொண்ட் மாகாணம் அஷ் ஷஹூர் நகரை சேர்ந்த 60 வயது நிரம்பிய அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் கடந்த 10-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!

மேலும், வைரஸ் உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று பரவவில்லை. இதனால் ஒட்டுமொத்த ஏமனிலும் அந்த ஒரு அரசு அதிகாரிக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த அரசு அதிகாரி நேற்று குணமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மேலும், வைரசில் இருந்து குணமான நபரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு 21 நாட்களும் முடிவடைந்தது.

இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடாக ஏமன் மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற வளைகுடா நாடுகளில்கொரோனா தொடர்ந்து பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.