கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் கத்தார் நாட்டிற்கு அங்கீகாரம்!

Share this News:

தோஹா (10 ஜூலை 2021): கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளில் கத்தார் நாடு இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஜெர்மன் பத்திரிகையான ‘டெர் ஸ்பீகல்’ வெளியிட்டுள்ள பட்டியலில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது.

லக்சம்பர்க், நோர்வே மற்றும் டென்மார்க் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.

ஆசிய நாடுகளான தைவான் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் ஆறாவது இடத்திலும், ஜப்பான் ஏழாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் கத்தார் உலகளவில் 15 வது இடத்தில் உள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதத்திற்கு மேலானோருக்கு சிகிச்சை அளித்து முற்றிலுமாகக் குணப்படுத்தியதே அந்நாட்டின் சாதனையாகக் கருதப்பட்டு இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.


Share this News:

Leave a Reply