சவூதியின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Share this News:

ரியாத் (29 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் கணித்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.

கடலோரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை, தூசி நிறைந்த காற்று மற்றும் உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மக்கா, ஜித்தா, ராபிக், தாயிப் ஆகிய இடங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கனமழை பெய்யும்.

அல் மஹ்த், மதீனாவில் உள்ள வாடி அல்ஃபாரா, புரைதா, உனைசா மற்றும் அல் காசிமில் உள்ள அல்ராஸ் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

ரியாத் மாகாணத்தில் உள்ள அல் கர்ஜ், அல் முஸாஹிமியா, அல் குவையா, அல்மாஜ்மா, அல் சுல்ஃபி, அல் காட், ஷக்ரா, ரூமா, அல் தவாத்மி, அஃபிஃப், அல் அஃப்லாஜ், வாடி அல் தவாசிர் மற்றும் லைலா அஃப்லாஜ் ஆகிய இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தம்மாம், தஹ்ரான், கோபார், அப்காய்க், அல் அஹ்ஸா மற்றும் அல் கதீஃப் ஆகிய இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply