சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வருட மல்டிபிள் விசா – சவூதி அரேபியா அறிவிப்பு!

Share this News:

ரியாத் (03 ஆக 2021): உலகின் 49 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வருட மல்டிபிள் விசாவை அறிமுகப்படுத்துகிறது சவூதி அரேபியா.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, சவுதி அரேபியா உலகம் முழுவதிலுமிருந்து 49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி வருவதற்கு அனுமதி வழங்கியது. அதன்படி ஒரு வருட காலத்திற்கு பல நுழைவு மின்னணு (multiple-entry electronic visa )விசாவைப் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, சுற்றுலாப் பயணிகள் 90 நாட்கள் தொடர்ந்து சவூதியில் தங்கிக்கொள்ளலாம்.

அதன்படி பின்வரும் நாடுகளின் குடிமக்கள் சுற்றுலா விசாக்களைப் பெற தகுதியுடையவர்கள்: அமெரிக்கா, கனடா, அன்டோரா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், நெதர்லாந்து, ஹங்கேரி . புருனே, சீனா (ஹாங்காங் மற்றும் மக்காவ் உட்பட), அத்துடன் ஜப்பான், கஜகஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, ஓசியானியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் சவூதி வர அனுமதிக்கப்படுள்ளனர்.

மேலும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட நெகட்டிவ் பிசிஆர் சோதனைக்குட்படுத்தியிருக்க வேண்டும் சவூதியில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் முழு டோஸும் பெற்றிருக்க வேண்டும். அவை ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா மற்றும் மாடர்னா ஆகியற்றின் இரண்டு டோஸ்கள் அல்லது ஜான்சன் & ஜான்சனின் ஒரு டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply