சினோஃபாம் மற்றும் சினோவாக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு சவூதி அரேபியா அனுமதி

Share this News:

ரியாத் (25 ஆக 2021): சவூதி அரேபியா மேலும் இரண்டு கோவிட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர் பாயன்டெக், ஜான்சன் & ஜான்சன் மற்றும் மோடெனா ஆகிய நான்கு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் மேலும், சீன தடுப்பூசிகளான சினோஃபாம் மற்றும் சினோவாக்கிற்கு சவுதி சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை ஆறாகக் கொண்டுவருகிறது.

அதேவேளை முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஜான்சன் & ஜான்சன் மற்றும் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சீன தடுப்பூசிகளின் விநியோகம் சவுதி அரேபியாவில் இன்னும் தொடங்கவில்லை. சினோஃபார்ம் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிடைக்கிறது மற்றும் பஹ்ரைனில் சினோஃபார்ம் மற்றும் சினோவாக் உள்ளது. ஆனால் இவை எதுவும் சவுதியில் இதுவரை விநியோகிக்கப்படவில்லை.

அதே நேரத்தில், சினோஃபார்ம் மற்றும் சினோவாக் எடுத்தவர்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் இல்லாமல் சவுதிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. . ஆனால் சவுதி அரேபியாவில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட நான்கு நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டோஸ் பூஸ்டர் டோஸை அவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்.

.இது இப்படியிருக்க ஸ்பூடினிக் மற்றும் கோவாக்ஸின் போன்ற தடுப்பூசிகள் இன்னும் சவுதி அரேபியாவால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து கோவாக்ஸின் எடுத்துக்கொண்ட பல மக்கள் இதனால் சவூதி வரமுடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.


Share this News:

Leave a Reply