கொரோனா விதிமுறைகளை திரும்பப் பெற்றது சவூதி அரேபியா!

Share this News:

ரியாத் (06 மார்ச் 2022): தனிமைப்படுத்தல், பிசிஆர் சோதனை உட்பட அனைத்து கோவிட் விதிமுறைகளையும் சவூதி அரேபியா திரும்பப் பெற்றது.

மக்கா, மதீனாவில் உள்ள ஹராமில் தொழுகைக்காக நுழைய அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேவேளை முகக்கவசங்கள் மற்றும் தவக்கல்னா பயன்பாடு தொடரும்.

இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கிய அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வோம்

1. சவூதிக்கு வருபவர்களுக்கு இனி நிறுவன தனிமைப்படுத்தல், வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் PCR சான்றிதழ் தேவையில்லை. ஆனால் விசிட் விசாவில் வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக கோவிட் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும். கோவிட் காப்பீடு 90 ரியால்களில் இருந்து தொடங்குகிறது. மேலும் விசிட் விசாக்களுக்கான காப்பீடும் தொடரும்.

2. சவூதி அரேபியாவிற்கு நேரடி பயணத் தடை உள்ள நாடுகளுக்கு இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது.

3. மக்கா, மதினா பெரிய மசூதிகளில் மற்றும் சவூதியில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சமூக இடைவெளியை இனி கடைப்பிடிக்க வேண்டியதில்லை. வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்தும் பழையபடி செயல்படலாம்.

4. காற்றோட்டம் உள்ள திறந்த பகுதிகளில் முகக்கவசம் இனி அணிய அவசியமில்லை. அதே நேரத்தில் மூடிய உட்புறங்களில் முகமூடி அணிய வேண்டும். அதாவது, வணிக நிறுவனங்களிலும், மூடிய வாகனங்களிலும், பணியிடங்களிலும் முகமூடி அணிந்திருக்க வேண்டும்.


Share this News:

Leave a Reply