சவூதி அரேபியாவில் மீண்டும் பரவும் கொரோனா – புதிய வழிமுறைகள் இன்று முதல் அமல்!

Share this News:

ரியாத் (30 டிச 2021): சவுதி அரேபியாவில் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் அனுமதி 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கடைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் ஒன்றரை மீட்டர் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் (டிசம்பர் 30, 2021) இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மேலும்  வணிக வளாகங்கள், பணியிடங்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். இவற்றை வாகனங்களிலும் அணிய வேண்டும். முகக்கவசம் அணியத் தவறினால் 1,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். நுகர்வோர் முகக்கவசம் அணிந்திருப்பதை கடை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல கடைக்குள் நுழையும் போது நோயெதிர்ப்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். கடை மற்றும் நிறுவனத்திற்குள் மக்களிடையே ஒன்றரை மீட்டர் இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். விதிகளை மீறினால் 10,000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.

திரையரங்குகளில் உள்ள மொத்த இருக்கைகளில் பாதி மட்டுமே நிரப்ப முடியும். ஒரு குடும்பம் ஒன்றாக வாகனங்களில் ஏறினால், ஐந்து பேர் ஒன்றாக இருக்கலாம். அதற்கு மேல் அனுமதியில்லை.

மேலும் சவூதி அரேபியாவில் கால்பந்து சங்கமும் நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் போட்டிகளை விளையாட வேண்டும். விதி எல்லா இடங்களிலும் சமமாக பொருந்தும். ஒமிக்ரான் பரவும் சூழலில் முந்தைய அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று சவுதி அரேபியாவில் 700க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. வரவிருக்கும் நாட்களில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடுமையான விதிகள் அமல்படுத்த வாய்ப்புள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை விரைவுபடுத்த மக்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது. கோவிட் பரவுவதைக் கருத்தில் கொண்டு 5 வயது முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply