72 நாடுகளுக்கு சவூதி பேரீச்சம்பழம் இலவச விநியோகம் தொடங்கியது!

Share this News:

ஜித்தா (13 மார்ச் 2023) 72 நாடுகளுக்கு இந்த ஆண்டுக்கான சவூதி பேரீச்சம்பழ இலவச விநியோகம் தொடங்கியுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்பு நாடுகளுக்கு சவூதி அரேபிய அரசு பேரீச்சம் பழங்களை பரிசாக வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 140 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதனால் பயனடைகின்றனர்.

பேரிச்சம்பழம் பரிசளிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களில் உள்ள 72 நாடுகளுக்கு இம்முறை பேரிச்சம்பழம் ஏற்றுமதி செய்யப்படும். கிங் சல்மான் நிவாரண மையம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கை பொது மேற்பார்வையாளர் டாக்டர். அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் ரபீஹ் இதனை தெரிவித்தார்.

இம்முறை, 19,000 டன்களுக்கும் அதிகமான பேரீச்சம்பழங்கள் பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட உள்ளன. அதில், 4,000 டன்கள் ஐ.நா.வின் உலக உணவு திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஐநாவுடனான இந்த ஒத்துழைப்பு 2002 இல் தொடங்கியது. உலக உணவுத் திட்டத்தின் மூலம் இதுவரை 84,000 டன் பேரீச்சம்பழங்கள் 130 சர்வதேச நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதற்கு தோராயமாக 13.5 கோடி ரியால்கள் அல்லது 297 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். இதன் மூலம் ஆண்டுக்கு 140 லட்சம் பேர் பயனடைவார்கள். சவூதி அரேபியாவில் ஆண்டுக்கு ஒன்றரை மில்லியன் டன் பேரீச்சம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகிலேயே பேரீச்சம்பழ உற்பத்தியில் சவுதி அரேபியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டப் பிரதிநிதி முகமது அல் குனைம், உலகெங்கிலும் உள்ள ஏழைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறையால் சவுதி அரேபியா இதனை செய்து வருவதாக கூறினார்.


Share this News:

Leave a Reply