சவூதி அரேபியா கோவிட் வரைமுறைப்படி வெளிநாட்டு பயணிகள் – முகீம் பதிவும் நடைமுறையும்!

Share this News:

ரியாத் (18 ஜுன் 2021): சவூதி அரேபியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் முகீம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

கோவிட் 19 நடைமுறைகளின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவிலும் வெளிநாட்டிலும் தடுப்பூசி போடப்பட்ட அல்லது போடாதவர்கள் சவூதி அரேபியாவுக்கு வரும்போது முகீம் பதிவு கட்டாயமாகும்.

சவூதி அரேபியாவுக்கு புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் பதிவு முடிக்கப்பட வேண்டும். விமான நிலையங்கள் மற்றும் பிற எல்லை நுழைவுகளில் நெரிசலைக் குறைக்கவும் குடியேற்ற நடைமுறைகளை விரைவுபடுத்தவும் இது உதவும் என்று பாஸ்போர்ட் துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் சவுதி அரேபியாவுக்கு வந்தவுடன் தங்கள் சொந்த செலவில் ஏழு நாட்களுக்கு உரிமம் பெற்றுள்ள தனிமைப்படுத்தலுக்குள் இருக்க வேண்டும். இது குறித்த தகவல்களை முகீம் போர்ட்டலிலும் வெளியிட வேண்டும்.

முகீம் பதிவு முடிந்ததும் பயணிகள் குறித்த விவரங்கள் மற்றும் தடுப்பூசி சான்றிதழின் நகலை அவர்களிடம் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண், சவுதி அரேபியாவில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியின் பெயர், தடுப்பூசி பெறப்பட்ட தேதிகள் மற்றும் தொகுதி எண் ஆகியவை இருக்க வேண்டும்.

தற்போது சவுதி அரேபியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த அனைத்து வெளிநாட்டு சுகாதார ஊழியர்களும் 72 மணி நேரத்திற்குள் விமான நிலையத்தில் கோவிட் நெகட்டிவ் சான்றிதழைக் காட்ட வேண்டும். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவர்கள் சவுதி அரேபியாவுக்கு வரும்போது தனிமைப்படுத்தல் தேவையில்லை. இருப்பினும், இரண்டு அளவு தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு சவுதி அரேபியாவில் ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். மேலும், முதல் மற்றும் ஏழாம் நாளில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாகும் என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது


Share this News:

Leave a Reply